RRR ஒரு Gay காதல் படமா..? சர்ச்சையில் சிக்கிய பிரபலம்!
ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி சமீபத்தில் வெளியான `ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தை `தன்பாலீர்ப்புக் காதல் கதை’ எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆர்.ஆர்.ஆர்
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா ரிலீஸாக வெளியான இப்படம் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கவனத்தை ஈர்த்தது.
ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்டோரும் இதில் முக்கிய ரோல்களில் நடித்து இருந்தனர். ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இப்படம் சில வாரங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
குப்பைத் திரைப்படம்
இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் இப்படம் பற்றி பதிவிட்டு இருந்த ஒருவர், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை 30 நிமிடங்கள் பார்த்ததாகவும் அதுவொரு ஒரு குப்பைத் திரைப்படம் எனவும் மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார்.
Gay love story ….
— resul pookutty (@resulp) July 3, 2022
இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்றவரும் ரஜினி நடித்த எந்திரன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவருமான ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி அந்தப் பதிவில் வந்து “ஆர்.ஆர்.ஆர் தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதை” என கமெண்ட் செய்திருந்தார்.
ரசூல் பூக்குட்டி
இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்- ராம்சரண் கதாபாத்திரங்கள் தன்பாலின ஈர்ப்பாளர்களைப்போல உள்ளதாக வெளிநாடுகளைச் சேர்ந்த நெட்டிசன்கள் சிலர் படம் வந்தபோது கருத்து தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், ரசூல் பூக்குட்டி இவ்வாறு கமெண்ட் செய்துள்ளதால் சமூக வலைதளத்தில் இது பேசுபொருளாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமையால்தான் ரசூல் பூக்குட்டி இவ்வாறு கூறியிருப்பதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
கணவனை தோளில் சுமந்து ஊர் முழுக்க வலம்.. தகாத உறவால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!