பெண்கள் குர்ஆன் ஓத கூடாது; அப்படி சொல்லக் கூடாது - தாலிபான் அடாவடி!

Afghanistan Taliban
By Sumathi Nov 01, 2024 10:09 AM GMT
Report

தாலிபான்கள் விதிகள் பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி தொடங்கியதிலிருந்து பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

afghanistan

பெண்கள் உயர்கல்வியைப் படிக்கக்கூடாது, விளையாட்டு துறையில் ஈடுபடக்கூடாது, தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் புர்கா அணிய வேண்டும். பூங்கா, ஜிம் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்லக்கூடாது.

மனைவியாக இருந்தாலும் பாலியல் உறவில் அதை செய்யக்கூடாது - புதிய சட்டம் அமல்!

மனைவியாக இருந்தாலும் பாலியல் உறவில் அதை செய்யக்கூடாது - புதிய சட்டம் அமல்!

பெண்களுக்கு தடை

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழங்களிலும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தாலிபான்கள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. மேலும், குற்றம் செய்தவர்களுக்கு பொதுவெளியில் கசையடி, கை, கால் துண்டிப்பு, மரண தண்டனை அளிக்கப்படுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் குர்ஆன் ஓத கூடாது; அப்படி சொல்லக் கூடாது - தாலிபான் அடாவடி! | Restrictions Women By Taliban In Afghanistan

இந்நிலையில், தற்போது பெண்கள் ஒரு குழுவாக தொழுகை நடத்தும்போது அதில் ஒரு பெண் மட்டும் சத்தமாக குர்ஆனை ஓதக்கூடாது. ஒரே மாதிரி குரலில் தான் குர்ஆனை ஓத வேண்டும். பெண்களின் குரல் பாதுகாக்கப்பட வேண்டியது.

அவர்கள் குரலை வெளி ஆட்கள் மட்டுமன்றி வெளியில் உள்ள பெண்களும் கேட்கக் கூடாது என்று தாலிபான் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த புதிய கட்டுப்பாட்டுக்கும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.