திருப்பதி கோயிலில் மறுக்கப்பட்ட அனுமதி; அமைச்சர் சேகர்பாபு வாக்குவாதம் - பரபரப்பு சம்பவம்!
கோயிலில் அறநிலையத்துறை ஆணையரை அனுமதிக்க மறுத்ததால் அமைச்சர் சேகர்பாபு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அனுமதி மறுப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆணிவாரா ஆஸ்தான விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து மங்கள பொருட்கள் சமர்ப்பணத்தின்போது 10 பேர் கோயிலுக்குள் செல்ல அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுடன் வந்தவர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அமைச்சர் வாக்குவாதம்
அப்போது கூடுதலாக இருந்த அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அமைச்சர் சேகர் பாபு, இணை ஆணையர் மாரியப்பனை அனுமதித்தால்தான் கோயிலுக்குள் செல்வேன் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
அதனையடுத்து மாரியப்பனும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.