சேகர்பாபு கோட்டைக்கு வருவதை விட கோயிலுக்கு செல்லும் நாட்கள்தான் அதிகம் : முதலமைச்சர் ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai Oct 05, 2022 07:07 AM GMT
Report

திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானதல்ல. தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்து திமுக அரசு செயல்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகம் சார்பாக வள்ளாலார் முப்பெரும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகம் சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு சிறப்பு தபால் உறை, லோகா, சிறப்பு மலர் ஆகியவற்றை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் :

கோயிலுக்கு செல்லும் அமைச்சர் 

   கோட்டைக்கு வருவதை விட கோயிலுக்கு அதிகம் செல்லும் அமைச்சர் சேகர்பாபு, என்று கூறிய முதலமைச்சர். கோயில்களில் நடைபெறும் அறப்பணிகளை நாள்தோறும் கண்காணித்து வருகிறார்.

வள்ளலாரை போற்றுவது திமுக அரசின் கடமை. வள்ளலார் பிறந்த நாளையொட்டி ஓராண்டு முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்.

சேகர்பாபு கோட்டைக்கு வருவதை விட கோயிலுக்கு செல்லும் நாட்கள்தான் அதிகம் : முதலமைச்சர் ஸ்டாலின் | Dmk Is Not Anti Spiritual M K Stalin

வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். பசி பிணியை தடுத்த வள்ளலார் வழியில் நடக்கும் திமுக அரசு, பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்து வருகிறது.   

திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானதல்ல 

சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்க கூடாது. சமூக நல்லிணக்கம் வேண்டும். திமுக அரசு ஆன்மீகத்துக்கு எதிரானது, மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது என சிலர் பரப்பி வருகிறார்கள்.

திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானதல்ல. தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்து திமுக அரசு செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.