கொரோனா தொற்று அதிகரித்தால் கட்டுப்பாடு விதிக்கப்படும் - அமைச்சர் மாசுப்பிரமணியன் அறிவிப்பு

Government of Tamil Nadu Ma. Subramanian
By Thahir Jun 16, 2022 05:20 PM GMT
Report

கொரோனா தொற்று பரவல் அதிகரித்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு பணிகள் குறித்தான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மீண்டும் கட்டுப்பாடுகள்

இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 476 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் சென்னையில் 221-பேருக்கும் செங்கல்பட்டில் 95-பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 95 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் நாளொன்றுக்கு 500 பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

அதனை 1000-ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். மாவட்டத்தில் மொத்தம் 400 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது எவ்வளவு பரிசோதனைகள் செய்யப்படுகிறதோ அதில் 10 சதவீதம் தாண்டும் போது அல்லது தொற்று ஏற்பட்ட இடங்களில் 40 சதவீதத்துக்கும் மேலாக அட்மிஷன் இருக்கிறபோது அந்த இடத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறைகளில் ஒன்று.

தமிழகத்தில் அது போன்ற நிலை ஏற்படவில்லை. தற்போது எடுக்க கூடிய பரிசோதனைகளில் 2,3 சதவீதத்திற்கு உள்ளயே பாதிப்புகள் இருப்பதனாலும்,

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது குறைவாக இருப்பதாலும் இது இரண்டுமே அதிகரித்தால் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என அவர் தெரிவித்தார்.

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை தேவையில்லை - ஓ.பன்னீர்செல்வம்..!