தமிழக அமைச்சரவை கூட்டம் - செந்தில் பாலாஜிக்கு புதிய பொறுப்பு

Udhayanidhi Stalin M K Stalin V. Senthil Balaji Tamil nadu Government of Tamil Nadu
By Karthikraja Oct 08, 2024 09:30 AM GMT
Report

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாடு அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. 

tamilnadu cabinet meeting

இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உட்பட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர். 

தமிழக அரசின் திட்டத்திற்கு ஐநா விருது - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழக அரசின் திட்டத்திற்கு ஐநா விருது - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திட்டங்களுக்கு ஒப்புதல்

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் “ரூ.38,600 கோடி மதிப்புள்ள 14 புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மின்னணு, மொபைல் போன் ஆலை, பாதுகாப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

thanagam thennarasu

மேலும், பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உற்பத்தி சார்ந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் மூலம், தமிழகத்தில் 46,930 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பு அமைச்சர்கள்

மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும், பொறுப்பு அமைச்சர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

இதன்படி, தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திருநெல்வேலி மாவட்டத்திற்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோரை நியமனம் செய்துள்ளார். 

மேலும், தேனி மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோரை நியமித்துள்ளார்.     

செந்தில்‌ பாலாஜி‌

கோயம்புத்தூர்‌ மாவட்டத்திற்கு மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை அமைச்சர்‌ வி. செந்தில்‌ பாலாஜி‌, காஞ்சிபுரம்‌ மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும்‌ துணிநூல்‌ துறை அமைச்சர்‌ ஆர்‌. காந்தி‌, பெரம்பலூர்‌ மாவட்டத்திற்கு போக்குவரத்துத்‌ துறை அமைச்சர்‌ எஸ்‌.எஸ்‌. சிவசங்கர்‌‌ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

senthil balaji

மேலும், நாகப்பட்டினம்‌ மாவட்டத்திற்கு பள்ளிக்‌ கல்வித்‌துறை அமைச்சர்‌அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி‌; மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்‌ துறை அமைச்சர்‌ சிவ.வீ. மெய்யநாதன்‌ ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்