தமிழக அரசின் திட்டத்திற்கு ஐநா விருது - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

United Nations M K Stalin Tamil nadu Government of Tamil Nadu Ma. Subramanian
By Karthikraja Oct 07, 2024 11:53 AM GMT
Report

தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐநா அமைப்பு விருது வழங்கியுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம்

தொற்றா நோய்களான சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று, மாதந்தோறும் மருந்து, மாத்திரைகள் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. 

மக்களைத் தேடி மருத்துவம்

இந்நிலையில் தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் (United Nation) அமைப்பு பாராட்டி விருது வழங்கியுள்ளது. 

வானிலை முன்னறிவிப்புகளை குறித்து தெரிந்து கொள்ள TN Alert செயலி - ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு

வானிலை முன்னறிவிப்புகளை குறித்து தெரிந்து கொள்ள TN Alert செயலி - ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு

உலக அங்கீகாரம்

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக நமது திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது! 

மக்களைத் தேடி மருத்துவம்

ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருது!

மா.சுப்பிரமணியனுக்கு வாழ்த்து

சிறப்பான முறையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி - கண்காணித்து - மேம்படுத்தி வரும் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறைச் செயலாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறைப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! 

இந்தத் திட்டம் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்வோம்" என தெரிவித்துள்ளார்.