இனி..வெயிட்டிங் லிஸ்ட் தொல்லை இல்லை - ஐஆர்டிசி அதிரடி!

India Indian Railways
By Sumathi Oct 10, 2022 11:44 AM GMT
Report

சிறப்பு ரயில்களை மட்டுமின்றி, மேம்படுத்தப்பட்ட வசதியுடன் கூடிய விகல்ப் திட்டத்தையும் இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

டிக்கெட் முன்பதிவு 

2015ம் ஆண்டு இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்ட விகல்ப் திட்டம் மூலமாக, இனி எந்த பயணியும் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டிய நிலை மாற்றப்பட்டுள்ளது.

இனி..வெயிட்டிங் லிஸ்ட் தொல்லை இல்லை - ஐஆர்டிசி அதிரடி! | Reserved Train If An Alternate Train Is Offered

முன்பதிவு செய்த ரயிலில் டிக்கெட் உறுதியாகவில்லை என்றால், அதே மார்க்கத்தில் ஓடும் அடுத்த ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்படும். அதாவது பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் போது, விகல்ப் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யும் பட்சத்தில் அதே மார்க்கத்தில் செல்லக்கூடிய மற்றொரு ரயிலில் கம்பார்ம் டிக்கெட் கிடைக்கும்.

விகல்ப் 

இத்துடன் குறுச்செய்தியும் அனுப்பப்பம். விகல்ப் திட்டத்தின் கீழ், ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும் முன்பதிவு டிக்கெட் உறுதியானால் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஏனெனில் ஆன்லைன் மூலம் உறுதி செய்யப்படாத டிக்கெட்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது.

விகல்ப் திட்டத்தின் கீழ் பயணிகள் மொத்தமாக 7 ரயில்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. விகல்ப் ஆப்ஷனை தேர்வு செய்தால், மாற்று ரயிலில் காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு உறுதியாக டிக்கெட் வழங்கப்படும் எனக்கூற முடியாது.

இந்தியன் ரயில்வே

ஏனெனில் இது ரயில் மற்றும் அதில் காலியாக உள்ள டிக்கெட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடக்கூடியது. விகல்ப் திட்டம் குறித்த வழிகாட்டுதல்களுடன் கூடிய டைலாக் பாக்ஸ் திரையில் தோன்றும்.

அதில் உங்களுடைய பிஎன்ஆர் எண்ணை டைப் செய்வதன் மூலமாக காத்திருப்பு பட்டியலில் இருந்து மாற்று ரயிலில் இடம் கிடைத்துள்ளதா? என்பதை அறியலாம்.