ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை
ரயில்களில் பட்டாசு அல்லது தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் மூன்று ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
பட்டாசு எடுத்துச் சென்றால் சிறை
பண்டிகை சீசன் நெருங்கி வருவதையடுத்து ரயில்களில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல ரயில்வே நிர்வாகம் தடை வித்துள்ளது.
தடையை மீறி பட்டாசு அல்லது தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் மூன்று ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் யாராவது பட்டாசு கொண்டு சென்றால் 139 என்ற உதவி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய ரயில் நிலையங்களில் சிறப்பு குழு மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.