பிரபல வங்கியின் உரிமத்தை அதிரடியாக ரத்து செய்த ரிசர்வ் பேங்க்!! வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி செய்தி
கூட்டுறவு வங்கி ஒன்றின் உரிமத்தை ரத்து செய்துள்ளது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா.
கூட்டுறவு வங்கிகள்
நாட்டின் கிராமங்களில் வசிக்கும் பல மக்களின் வாழ்வாதாரத்தில் மிக முக்கிய இடத்தை பிடிப்பவை கூட்டுறவு வங்கிகள். அரசு திட்டங்களை கிராம புற மக்களுக்கு வழங்கி வருகின்றன இந்த கூட்டுறவு வங்கிகள்.
நகை அடமானம் வைப்பது போன்றவையும் குறைந்த வட்டியில் கிடைப்பதால், கிராம புறங்களில் இது போன்ற வங்கிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அனைத்து வங்கிகளையும் ஆய்வு செய்து, அவற்றில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அந்த சம்மந்தப்பட்ட வங்கிகள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றது.
ரத்து
அப்படி தான் கூட்டுறவு வங்கி ஒன்றின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா. உத்திரபிரதேச மாநிலத்தின் காஜிபூரில் அமைந்துள்ள பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
போதுமான மூலதனம் மற்றும் சம்பாதிக்கும் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டுறவு ஆணையர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், உத்தரபிரதேசம் வங்கியை மூடுவதற்கான உத்தரவை பிறப்பிக்க மற்றும் ஒரு கலைப்பாளரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வங்கிக்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லை என்று குறிப்பிடும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, வங்கி அதன் வணிகத்தைத் தொடர அனுமதித்தால் பொது நலன் மோசமாக பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டதன் விளைவாக, பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கி வங்கி வணிகத்தை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.