இனி Paytm'ல இதெல்லாம் வேலை செய்யாது - அதிரடி காட்டும் ரிசர்வ வங்கி
FASTag சேவைக்கான அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலில் இருந்து Paytm பேமெண்ட்ஸ் வங்கியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நீக்கியுள்ளது.
Paytm பிரச்சனை
KYC பிரச்சனை காரணமாக, Paytm பேமெண்ட்ஸ் வங்கியின் மீது சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கித் தடை விதித்திருந்தது. இதற்கு பிப்ரவரி 29- ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், வரும் மார்ச் 15- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமீறலின் காரணமாக இந்த தடையை ரிசர்வ வங்கி கொண்டு வந்துள்ள நிலையில், இந்த செயலின் பயன்பாட்டை குறைக்கவும் மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு நீட்சியாக தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், FASTag சேவைக்கான அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலில் இருந்து Paytm பேமெண்ட்ஸ் வங்கியை நீக்கியுள்ளது.
டிசம்பர் 31-க்கு பிறகு Google Pay, Paytm, Phonepe பயன்படுத்த முடியாது?? - மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை ..!!
ரிசர்வ வங்கி தரப்பில் இது குறித்தான அறிவிப்பில் “மார்ச் 15ஆம் தேதிக்குப் பிறகு Paytm பேமெண்ட்ஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் கணக்கில் மேற்கொள்ளப்படும் டெபாசிட் பரிவர்த்தனைகள், FASTag போன்ற எந்த ஒரு சேவையும் செல்லுபடியாகாது.
வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே மார்ச் 15ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களின் கணக்குகளை வேறு வங்கிகளுக்கு மாற்றிக்கொள்ளவும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.