அரசு வேலையில் 65 சதவீதம் இட ஒதுக்கீடு - சட்டசபையில் நிறைவேற்றம்!

Bihar
By Vinothini Nov 10, 2023 05:06 AM GMT
Report

கல்வி மற்றும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

சட்டசபை

பிஹார் சட்டப்பேரவையில், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கை நேற்று முன்தினம் முதல்வர் நிதிஷ் குமார் தாக்கல் செய்தார். அதில், ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அனுமதித்த 50 சதவீத இடஒதுக்கீடு என்ற உச்ச வரம்பையும் தாண்டி 65 சதவீதம் இடஒதுக்கீடு தர இந்த மசோதா வழிவகை செய்கிறது.

reservation-bill-passed-in-bihar-assembly

பொருளாதார ரீதியாக பின் தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடும் இருப்பதால் பிஹாரின் புதிய இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்தால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மொத்தம் 75 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் சென்றுவிடும்.

கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகை - வைரல் பதிவு!

கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகை - வைரல் பதிவு!

புதிய இடஒதுக்கீடு

இந்நிலையில், பட்டியலினத்தோர்: 20 சதவீதம், பழங்குடியினர்: 2 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: 43 சதவீதம் என்ற வீதத்தில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

reservation-bill-passed-in-bihar-assembly

தற்போதைய சூழலில் பிஹாரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 18 சதவீதம், ஓபிசிக்களுக்கு 12 சதவீதம், பட்டியலினத்தோருக்கு 16 சதவீதம் மற்றும் பழங்குடியினத்தவருக்கு 1 சதவீதம், பிற்படுத்தப்பட்ட வகுப்பின் மகளிருக்கு 3 சதவீதம் என்று இடஒதுக்கீடு கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இடஒதுக்கீடு மசோதா ஒருமானதோடு நிறைவேற்றப்பட்டது.