பூமியின் மையத்தில் விரிசல்; வேகமான நகர்வு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
பூமியின் மையத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
பூமியின் மையம்
கனடாவின் ஆர்க்டிக் தீவுகளில் உள்ள பாஃபின் தீவில் 62 மில்லியன் ஆண்டுகள் பழமையான எரிமலை உள்ளது.
இங்கு கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜியோ கெமிஸ்ட்ரி மற்றும் ஹூட்ஸ் ஹோல் ஓசியானோகிராஃபிக் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், எரிமலைக்குழம்பு வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ஹீலியம்-3 வாயுவைக் கொண்டிருந்துள்ளது. இந்த வாயு பூமியின் மையத்தில் இருந்து வெளிவருவது கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவு
பூமியின் மையத்தில் இருந்து ஹீலியம் வந்தால் அதனுடன் மற்ற தனிமங்களும் காணப்படும்.பூமியின் மையம் நாம் நினைத்ததை விட அதிகமாக நகரக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், பூமியின் மையம் புவி வேதியியல் அடுக்குகளால் மற்ற மேற்பரப்பில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது என பிற ஆய்வுகள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.