கோவாக்சின் போட்டவர்களுக்கும் இந்த நிலை தான் - பகீர் ஆய்வு முடிவுகள்!

COVID-19 COVID-19 Vaccine India Virus
By Sumathi May 17, 2024 03:00 AM GMT
Report

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

கோவாக்சின் 

இந்தியாவில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள மக்கள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.

covaxin

பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட கோவிஷீல்டை, ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனமும், கோவாக்சினை ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனமும் தயாரித்தது.

இதில், கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களில் சிலருக்கு அரியவகையான ரத்த உறைதல் பாதிப்பு, தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவு ஆகிய பக்கவிளைவுகள் இருப்பதாக ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் ஒப்புக் கொண்டது.

கோவிஷீல்ட்; அரிய பக்க விளைவுகள் ஏற்படும் - தயாரித்த நிறுவனமே விளக்கம்!

கோவிஷீல்ட்; அரிய பக்க விளைவுகள் ஏற்படும் - தயாரித்த நிறுவனமே விளக்கம்!

ஆய்வு முடிவுகள்

தொடர்ந்து, சந்தையிலிருந்து கோவிஷீல்டு தடுப்பூசி திரும்பப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் பனாரஸ் இந்து பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.

கோவாக்சின் போட்டவர்களுக்கும் இந்த நிலை தான் - பகீர் ஆய்வு முடிவுகள்! | Research Result On Covid 19 Vaccine Covaxin

இளம் பருவத்தினர் 635 பேர் மற்றும் வயதுவந்தோர் 291 பேரிடம், தடுப்பூசி போட்டுக் கொண்ட ஓராண்டுக்குப் பின் நிலவரம் குறித்து தொலைபேசி மூலம் கருத்துக்கேட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இவற்றில், 33 சதவீதம் பேர், தங்களுக்கு பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும், 10.5 சதவீதம் பேருக்கு தோல் பாதிப்பும், 10.2 சதவீதம் பேருக்கு பொதுவான பாதிப்புகளும், 4.7 சதவீதம் பேருக்கு நரம்பியல் பாதிப்புகளும் இருந்தது தெரியவந்தது. குறிப்பாக, சுவாசக் குழாயின் மேல் பகுதியில் வைரஸ் தொற்று, பக்கவாதம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, பெண்களில் 4.6 சதவீதம் பேருக்கு மாதவிடாய் பிரச்சினை,

2.7 சதவீதம் பேருக்கு கண் பாதிப்பு, 6 சதவீதம் பேருக்கு தைராய்டு பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்பட்டவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவருக்கும் நீரிழிவு நோய் இருந்துள்ளது. 50 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.