ரூபாய் நோட்டில் காந்திக்கு பதில் சாவர்கர் படத்தை வைக்க வேண்டும் - இந்து மகாசபா

Uttar Pradesh
By Sumathi Feb 27, 2023 06:33 AM GMT
Report

ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்திற்கு பதிலாக சாவர்கர் படம் இடம் பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு

இந்து மகாசபாவின் முன்னாள் தலைவர் சாவர்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனால், உத்தரப்பிரதேசம், மீரட்டில் இந்து மகாசபா அலுவலகத்தில் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரூபாய் நோட்டில் காந்திக்கு பதில் சாவர்கர் படத்தை வைக்க வேண்டும் - இந்து மகாசபா | Repalce Gandhi With Veer Savarkar On Money

அதில் மத்திய பாஜக அரசுக்கு கோரிக்கை வைத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், இந்திய விடுதலை போராட்டத்தில் பெரும் புரட்சிகர போராட்ட வீரராக திகழ்ந்தவர் சாவர்கர். இந்திய ரூபாய் நோட்டில் காந்தி படத்திற்கு பதிலாக சாவர்கர் படத்தை அரசு வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

சாவர்கர் படம்

மேலும், நாடாளுமன்றத்திற்கு செல்லும் சாலைக்கு சாவர்கரின் பெயரை சூட்ட வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதே சாவர்கருக்கு மோடி அரசு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என கடித்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய ரூபாய் நோட்டில் முதல் முறையாக காந்தியின் படம் சேர்க்கப்பட்டது.அதன் பின்னர் வேறு எந்த தனிநபரின் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம் பெறாதது குறிப்பிடத்தக்கது.