ரூபாய் நோட்டில் இரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம் - ரிசர்வ் வங்கி பரிசீலனை?
இந்திய ரிசர்வ் வங்கி இனி புதிதாக அச்சிடவுள்ள ரூபாய் தாள்களில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அப்துல் கலாம் ஆகியோரின் படங்களைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூபாய் நோட்டுகள்
மத்திய நிதி அமைச்சகமும் இந்திய ரிசர்வ் வங்கியும் மகாத்மா காந்தியின் உருவம் அச்சிடப்பட்டு வெளியாகும் ரூபாய் நோட்டுகளைப் போலவே இரவீந்திரநாத் தாகூர் மற்றும் அப்துல் கலாம் ஆகியோரின் படங்களைக் கொண்ட புதிய சீரியஸ் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது குறித்துப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தாகூர் மற்றும் கலாம்
இந்திய ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவும், காந்தி, தாகூர் மற்றும் கலாம் வாட்டர்மார்க்ஸ் கொண்ட இரண்டு தனித்தனி ரூபாய் நோட்டு மாதிரிகளை ஐஐடி டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானிக்கு அனுப்பியதாகத் தெரிகிறது.
இரண்டு செட்களில் இருந்து பாதுகாப்பு காரணிகளைப் பூர்த்திச் செய்ய ஏதுவான ஒன்றைத் தேர்வு செய்து அவற்றை அரசாங்கத்தின் இறுதி பரிசீலனைக்குச் சமர்ப்பிக்குமாறு ஷஹானியிடம் ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம்
கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.