பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் பாலத்தில் பழுது - என்ன நடந்தது?
மோடி திறந்து வைத்த பாம்பன் பாம்பன் பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது.
புதிய பாம்பன் பாலம்
இலங்கை பயணத்தை முடித்து ராமேஸ்வரம் வந்த இந்திய பிரதமர் மோடி, புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை திறந்து வைத்துள்ளார்.
அதை தொடர்ந்து, ராமேஸ்வரம் மற்றும் தாம்பரம் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஒன்றையும் தொடங்கி வைத்துள்ளார்.
1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாம்பன் பாலம், இந்தியாவில் கடல் பகுதியின் மேல் அமைக்கப்பட்ட முதல் ரெயில்வே பாலம் என்ற சிறப்பை பெற்றது.
இந்த பாலம் நூற்றாண்டுகள் கடந்த நிலையில், அடிக்கடி பழுது ஏற்பட்டதால், ரூ.550 கோடி செலவில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
பாலத்தில் பழுது
இதற்கான கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்து, சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு பரிசோதித்த பின்னர், தற்போது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரதமர் மோடி இந்த பாலத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணித்துள்ளார்.
புதிய பாலத்தில் ரயில் சென்ற பின், செங்குத்து பாலம் தூக்கப்பட்டு கீழே கப்பல் சென்றுள்ளது. இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலம் கீழே இறக்க முடியாமல் பழுது ஏற்பட்டுள்ளது.
தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றமும், இன்னொரு பக்கம் இறக்கமுமாக இருப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பழுது நீக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.