ரூ.2 லட்சத்தில் வாடகைக்கு கன்னி பெண்கள் - முண்டியடிக்கும் ஆண்கள்!
வாடகைக்கு மனைவி கிடைக்கும் நடைமுறை கவனம் பெற்றுள்ளது.
வாடகைக்கு மனைவி
மத்திய பிரதேசம், சிவபுரி கிராமங்களில் வாடகைக்கு மனைவி என்ற நடைமுறை ஒன்று இருந்து வருகிறது. இதனை "தாதிச்சா பிரதா" என்று அழைக்கின்றனர். இதன்படி, பணக்கார ஆண்கள், தங்களுக்கு பிடித்த பெண்களை ஏலத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்.
இளம் பெண்கள் மட்டுமல்லாமல், மனைவிகளையும் சந்தையில் வாடகைக்கு விடுகிறார்கள். கன்னித்தன்மை, உடல் தோற்றம், வயது போன்றவற்றை வைத்து, பணம் மதிப்பிடப்படுகிறது.
ஏலத்தில் பெண்கள்
8 வயது முதல் 15 வயதிற்குட்பட்ட கன்னிப்பெண்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. இவர்களுக்கு ரூ. 15,000 முதல் 25,000 வரை பணம் தருகிறார்கள். அழகான கன்னி பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை ஏலம் பேசப்படுவதாக கூறப்படுகிறது.
வாடகை பெண்களுக்கு, ரூ.10 முதல் ரூ.100 வரையிலான பத்திரத்தில் ஒப்பந்தம் போடப்படுகிறது. பின், அதனை புதுப்பித்தும் கொள்கிறார்கள். பல பெண்களுக்கு இது வருமானத்தை தருவதாக ஒருதரப்பினர் கூறுகின்றனர். இருப்பினும் இது பாலின சுரண்டல் என பலர் விமர்சித்து வருகின்றனர்.