திருமண விழாவில் பரிமாறப்பட்ட கேரட் அல்வா.. 50 பேர்மருத்துவமனையில் அனுமதி -அதிர்ச்சி தகவல்!
திருமண விழாவில் பரிமாறப்பட்ட கேரட் அல்வா சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள ஃப்ரிட்நகர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராஜ்பால் என்பவரின் மகனுக்கான விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்.
அப்போது இரவு விருந்தின்போது சைவம் மற்றும் அசைவம் இரண்டும் பரிமாறப்பட்டது. உணவுடன் கேரட் அல்வாவும் பரிமாறப்பட்டது. இரவு உணவிற்கு கேரட் ஹல்வா சாப்பிட்ட பிறகு, சில விருந்தினர்கள் வயிற்று வலி மற்றும் வாந்தி எடுக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் கேரட் அல்வா தயாரிக்கும் போது சேர்க்கப்பட்ட மாவா என்ற மூலப்பொருளில் கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கேரட் அல்வா
இந்த விவகாரம் குறித்து தாகுர்த்வாரா பிளாக்கின் முன்னாள் தலைவர் கூறுகையில், "திருமண விழாவில் ஏராளமானோர் வாந்தி, வயிற்றுவலி ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனைவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. சமையல்காரர் உணவில் கலக்கியது என்னவென்று தெரியவில்லை, இது அனைவரின் நிலையையும் மோசமாக்கியதாகக் கூறினார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.