என்னது சீனாவில் அப்பா இல்லாமல் வந்தா வாடகைக்கு எடுத்துக்கலாமா? - புதிய சேவை அறிவிப்பு!

China World
By Vinothini Jul 07, 2023 05:44 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

சீனாவில் வாடகை தந்தி சேவை அறிமுகமாகியது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாத் ஹவுஸ்

சீன நாட்டில் பழங்காலத்தில் இருந்தே பாத் ஹவுஸ்-க்கு செல்லும் பழக்கம் உள்ளது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு தனி தனியாக அமைக்கப்பட்டிருக்கும். சில பாத் ஹவுஸ் இடங்கள் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, மசாஜ், உணவு மற்றும் பானங்கள் என சகல வசதியோடு இருக்கும்.

rent-a-dad-new-announcement-in-china

சில சமயங்களில் இந்த அங்களுக்கு சென்று மக்கள் ரிலாக்ஸ் செய்வது வழக்கமாக உள்ளது. தற்போது வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணம் ஷென்யாங்கில் பாத் ஹவுஸில், புதிதாக ஒரு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர். அது ஆண்குழந்தையை அழைத்து வரும் அம்மாக்களுக்கு உதவும் வகையில் "Rent A Dad" வாடகைக்கு பாப்பாவை எடுத்துக்கொள்ளும் சேவை வந்துள்ளது.

வாடகை அப்பா

இந்நிலையில், அந்த வாடகை அப்பா குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, உடையை மாற்றுவது, பராமரிப்பது போன்ற வேலைகளைச் செய்வார். இந்த சேவைகளை எந்த கட்டணமும் இன்றி இலவசமாக அளிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

rent-a-dad-new-announcement-in-china

இந்த அறிவிப்பு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, மேலும், இதில் குழந்தைகளைப் பராமரிக்கும் ஆண்கள் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுப்படுவார்கள், அவர்களுக்கு ஏதேனும் பயிற்சிகள் வழங்கப்படுமா, வாடகைத் தந்தையாக வருபவர்களுக்கான வயது வரம்புகள் என்ன என்பதெல்லாம் குறிப்பிடப்படவில்லை.