நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் சீனா - எப்போது தெரியுமா?
சீனாவில் இருந்து மனிதர்களை 2030 ஆம் ஆண்டு நிலாவுக்கு அனுப்பும் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் சீனா
சீனா கடந்த காலங்களில் வெற்றிகரமாக சந்திரன் மற்றும் செவ்வாய் கோளுக்கு ரோவரை அனுப்பி உள்ளது. 2021 ஆம் ஆண்டு சீனாவும், ரஷ்யாவும் சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்தன.
பல்வேறு நாடுகளும் விண்வெளி போட்டியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் 2030- ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீனா நேற்று அறிவித்தது.
Image Source by SpaceRef China on twitter
இந்த திட்டத்தின் மூலம் மனிதர்களை நிலவில் தரை இறக்குவது, நிலவினை ஆய்வு செய்தல் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்வதே தங்களது இலக்கு என சீனா கூறியுள்ளது.