bournvita, horlicks; ஆரோக்கிய பானம் பட்டியலில் இருந்து நீக்கம் - மத்திய அரசு அதிரடி உத்தரவு!
போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ் ஆகிய அனைத்தும் ஆரோக்கிய பானங்கள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆரோக்கிய பானம்
ஆரோக்கிய பானம் போர்ன்விட்டா உள்ளிட்ட அனைத்து பானங்களையும் ஆரோக்கிய பானங்கள் என்ற பிரிவில் இருந்து நீக்க கோரி மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த உத்தரவில், " குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய (சிபிசிஆர்) சட்டம், 2005, பிரிவு 3-ன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்ட ரீதியான அமைப்பு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்).
இந்த ஆணையம், சிஆர்பிசி சட்டம் 2005 இன் பிரிவு 14 -ன் கீழ் நடத்திய விசாரணைக்குப் பின்னர், ஆரோக்கிய பானங்கள் வரையறை தொடர்பாக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ)
தினமும் குடிக்கும் பாலை இந்த மாதிரி குடித்து வந்தீங்கன்னா... கிடைக்கும் சத்து இரு மடங்கு பெருகுமாம்!
மத்திய அரசு உத்தரவு
மற்றும் மொண்டெலீஸ் இந்தியா உணவு பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சமர்ப்பித்த விதிகள் அடிப்படையில் எஃப்எஃப்எஸ் சட்டம் 2006-ன் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தது.
இ-காமர்ஸ் தளங்களில் போர்ன்விட்டா உள்ளிட்ட பானங்கள் ஆரோக்கிய பானம் என்ற பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டிருந்தது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையில், ந்திய உணவு சட்டங்களில் ஆரோக்கிய பானம் குறித்து தெளிவான வரையறை இல்லை.
ஆகையால் அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களும் தங்களது இணைய தளங்களின் ஆரோக்கிய பானம் பட்டியலில் இருந்து போர்ன்விட்டா உள்ளிட்ட பானங்களின் பெயர்களை நீக்க வேண்டும். இவ்வாறு ராஜேஷ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.