தினமும் குடிக்கும் பாலை இந்த மாதிரி குடித்து வந்தீங்கன்னா... கிடைக்கும் சத்து இரு மடங்கு பெருகுமாம்!

life-style-health
By Nandhini Jul 13, 2021 12:29 PM GMT
Report

உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. பால் வெள்ளை நிறத்தில் உள்ள அமிர்தம் என்று அழைக்கப்படுகிறது. முன்பெல்லாம் உள்ளூர் பால் பண்ணைகளிலிருந்து பால் வந்தது, அவை அருகிலுள்ள வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டன.

மேலும் சில அரசாங்க பால் பண்ணைகள் கிளாஸ் பாட்டில்களில் பால் சப்ளை செய்தன. பால் ஒரு ஆரோக்கிய பானம் என்ற செய்தியை 1990-களில் நாட்டின் மூலை முடுக்கில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரம் வழியே அரசு கொண்டு சென்றது. ஆனால் இன்று திரும்பும் இடமெல்லாம் சிறிய கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்கெட்டுகள் வரை எல்லா இடங்களிலும் பால் விற்கப்பட்டு வருகிறது.

குறைந்தபட்சம் நாளொன்றுக்கு அரை லிட்டர் பால் வாங்காதவர்கள் கூட இன்று இல்லை எனலாம். பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட. பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு, சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளன.

தினமும் குடிக்கும் பாலை இந்த மாதிரி குடித்து வந்தீங்கன்னா... கிடைக்கும் சத்து இரு மடங்கு பெருகுமாம்! | Life Style Health

தயிர்

பாலாக குடிக்க விரும்பம் இல்லாதவர்கள், பாலை தயிர் போன்று செய்து சாப்பிடலாம். அதற்கு பாலில் சிறு துளிகள் எலுமிச்சை சாற்றை பிளிந்து, 3-4 மணிநேரம் தனியாக குளிர வைத்தால், தயிர் தயாராகிவிடும். இந்த முறையில் பாலில் என்ன சத்துக்கள் உள்ளதோ, அதே சத்துக்கள் தயிரின் மூலமாகவும் கிடைத்து விடும்.

ஆரோக்கிய பால் பொடிகள்

சில குழந்தைகளுக்கு பால் வாசனை பிடிக்காது. அதனால, பாலில் பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்ற ஆரோக்கிய பால் பொடிகளை சேர்த்து கொடுத்து வரலாம். இதனால் குழந்தைகள் விரும்பி குடித்து வருவார்கள்.

பால் மற்றும் தேன்

நீரிழிவு நோயாளிகள் அல்லது எடையை குறைக்க விரும்புபவர்கள், பாலில் சர்க்கரை சேர்க்கக்கூடாது. ஆனால் அதற்கு பதிலாக தேன் சேர்த்து சாப்பிடலாம். இந்த முறையில் குடித்தால், பால் மிகவும் சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

பால் மற்றும் குங்குமப்பூ

அழகாகவும், பொலிவோடும் நீங்க இருக்க விரும்பினால், பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து குடித்து வரலாம். இதனால் பாலின் சுவை வித்தியாசமாக இருக்கும். சருமமும் மிகவும் அழகாக மின்னும்.

குளிர்ந்த பால்

வெதுவெதுப்பான பால் சிலருக்கு அசிடிட்டி மற்றும் செரிமானமின்மையை ஏற்படுத்தி விடும். அதனால், பாலை காய்ச்சி குளிர வைத்து குடித்தால், அது அசிடிட்டியை போக்கி விடுமாம்.

பால் மற்றும் புரோட்டீன் பவுடர்

சில நேரங்களில் சாதாரண பாலில் போதிய புரோட்டீன் சத்துக்கள் இருக்கவே இருக்காது. இவ்வாறு உடலுக்கு போதிய புரோட்டீன் கிடைக்கவில்லையென்றால், உடல் நலம் சரியில்லாமல் போகும். எனவே, பாலுடன் சிறிது புரோட்டீன் பவுடரை சேர்த்து குடித்து வந்தால் சத்துக்கள் இரு மடங்காக கிடைக்கும்.

மில்க் ஷேக்

பாலை குடிப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்று தான் இந்த மில்க் ஷேக். எனவே பழங்கள், சாக்லெட் போன்றவற்றால் செய்யப்பட்ட மில்க் ஷேக்கை குடிப்பதும் நல்லது. இதனால் பழங்கள் மற்றும் சாக்லெட்டில் உள்ள சத்துக்களும் உங்கள் உடலுக்கு கிடைக்கும்.