திருப்பதியில் இந்துக்கள் அல்லாத ஊழியர்கள் பணி நீக்கம்? தேவஸ்தானம் முடிவு!

Andhra Pradesh Tirumala
By Sumathi Nov 19, 2024 08:45 AM GMT
Report

இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதி ஊழியர்கள்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகளவில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

tirupati

இந்த கோவிலின் நிர்வாகத்தை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. அங்கு ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து தேவஸ்தான அறங்காவல் குழு நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கெல்லாம் திருப்பதியில் தங்கும் அறை கிடையாது - தேவஸ்தானம் முடிவு!

இவர்களுக்கெல்லாம் திருப்பதியில் தங்கும் அறை கிடையாது - தேவஸ்தானம் முடிவு!

தேவஸ்தானம் முடிவு?

இதனைத் தொடர்ந்து அறங்காவலர் குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம், தலைவர் பி.ஆர் நாயுடு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில் பி.ஆர் நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

தலைவர் பி.ஆர் நாயுடு

திருப்பதி கோவிலில் பணியாற்றும் இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்களை மாற்ற முடிவு செய்து இருக்கிறோம். ஆந்திர அரசிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக 2018 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையின் படி, திருப்பதி கோவிலில் 44 பிற மத ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.