ஏழு நாட்களாகத் தொடர் இருமல்..குழந்தையின் மூச்சுக் குழாயில் LED -சாதுர்யமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்!
குழந்தையின் மூச்சுக் குழாயில் LED சிக்கி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை
மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் சுபபிரகாஷ்- நந்தினி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல், சளி , இருமல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளது.
இதனால் கடந்த 13 ஆம் தேதி குழந்தையின் பெற்றோர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு மருத்துவர்கள் குழந்தையை எக்ஸ்ரே, சிடிஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை செய்துள்ளனர். அப்போது குழந்தையின் மூச்சுக் குழாயில் LED சிக்கி இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அரசு இராசாசி மருத்துவமனையின் மயக்கவியல் துறை இயக்குநர் தலைமையிலான 5 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். சுமார் இரண்டு மணி நேரத் தீவிர முயற்சிக்குப் பின் வெற்றிகரமாக அந்த எல்இடி பல்பு அகற்றப்பட்டது.
LED
இது குறித்து மருத்துவர் கூறுகையில் ,’’ ஒரு வயது பெண் குழந்தை சுமார் ஏழு நாட்களாகத் தொடர் இருமல் மற்றும் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இது குறித்து நாங்கள் கேட்ட போது அக்குழந்தையின் பெற்றோர் குழந்தை எந்த பொருளையும் விழுங்கவில்லை என்றனர்.
ஆனால் பரிசோதனையில் மூச்சுக் குழாயின் இடது புறத்தில் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.