தமிழ்நாட்டில் நுழைந்தது HMPV வைரஸ் - சென்னையில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி
சென்னையில் இரு குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
HMPV வைரஸ்
சீனாவில் 2019 ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலகையே முடக்கி போட்டது. தற்போது சீனாவில் புதிய வகை வைரஸ் உருவாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த HMPV வைரஸானது இன்று கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இரு குழந்தைகளுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் அகமதாபாத் நகரில் ஒரு குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் HMPV
இந்நிலையில் இந்த HMPV வைரஸானது தமிழகத்தில் இரு குழந்தைகளுக்கு பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் சென்னையில் இரு குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனை மற்றும் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தலா 1 குழந்தைக்கு எச்எம்பிவி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நாடு முழுவதும் இன்று 3 பேருக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரே நாளில் இந்த தொற்றின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.