செந்தில் பாலாஜிக்கு இருந்த 4 அடைப்புகள் நீக்கம் - அறுவை சிகிச்சை குறித்து வெளியானது மருத்துவ அறிக்கை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்த இதய அறுவைற சிகிச்சை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது காவேரி மருத்துவமனை.
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை சீராக உள்ளது
செந்தில் பாலாஜியின் இதயத்தின் ரத்த குழாய்களில் இருந்த 4 அடைப்புகளை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை இன்று அதிகாலை முதல் தொடங்கி காலை வரை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று நிறைவு பெற்றது.
இந்த அறுவை சிகிச்சை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சைக்கு பிற்கு தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளது.
புதிய ரத்த நாளம் மூலம் இருதய தமனியில் இருந்த அடைப்புகள் சீர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயவியல் மருத்துவ நிபுணர் ரகுராம் தலைமையிலான மருத்துவர் குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்தது.