கருவளையம் சீக்கிரம் மறையனுமா? இதை பண்ணுங்க போதும்!
கருவளையத்திற்கான காரணம் மற்றும் தீர்வுகள் குறித்து பார்க்கலாம்.
கருவளையம்
இன்சுலின் எதிர்ப்பின் காரணமாக, உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் வீக்கம் மற்றும் தோல் நிறம் மாறலாம். அது கண்களுக்குக் கீழே கருமையை ஏற்படுத்துகிறது.
மன அழுத்தம் மற்றும் கார்டிசோலின் அதிகரிப்பு ஆகியவை கண்களுக்குக் கீழே உள்ள மென்மையான தோலை பலவீனப்படுத்தும். தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்கள் தோலில் கொலாஜனை அதிகரிக்கச் செய்து, கருமையான வட்டங்களை தோற்றுவிக்கும்.
காரணம்/தீர்வு
தூக்கமின்மை கண்களைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களை அதிகரிக்கிறது, இது கருவளையங்களை ஏற்படுத்தும். உடலில் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்தும். அது கண்களுக்கு கீழ் கருவளையங்களை உருவாக்குகிறது. கருவளையங்களைக் குறைக்க உதவும் யோகா அல்லது தியானம் போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் டி3 சப்ளிமெண்ட்ஸையும் எடுத்துக்கொள்ளலாம். தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும். ரோஸ் வாட்டரை கற்றாழையுடன் சேர்த்து நாம் பயன்படுத்துகையில் கருமையை நீக்கி, முதுமை தோற்றம் ஏற்படுவதை தடுத்து, சருமத்தை மின்ன செய்யும்.
எலுமிச்ச பழ சாறை, கற்றாழையுடன் சேர்த்து பயன்படுத்தினால் கருவளையத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும். தேன் மற்றும் கற்றாழை சேர்த்து பயன்படுத்தினாலும் சருமம் ஆரோக்கியம் பெறும்.