தினமும் பாலியல் உறவு; அந்த 2 பிரச்சனை இருக்கு - டாக்டர்ஸ் எச்சரிக்கை!
தினமும் பாலியல் உறவில் ஈடுபட்டால் உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து பார்க்கலாம்.
பாலியல் உறவு
தினசரி உடலுறவு கொள்ளும் போது பல நன்மைகள் ஏற்படுகிறது. குறிப்பாக இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. மன அழுத்தம் குறைகிறது. பாட்னர் உடன் நெருக்கம் அதிகரிக்கிறது.
அடிக்கடி உடலுறவு கொள்வோருக்கு இதய நோய் ஏற்படும் ஆபத்து குறைவதாக அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கார்டியாலஜி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உறவின்போது வெளியாகும் எண்டோர்பின்கள் இயற்கையான வலி நிவாரணியாகச் செயல்படுகிறது.
பாதிப்புகள்
இதனால் ஒற்றைத் தலைவலி மற்றும் மூட்டுவலி குறையும். இருப்பினும் தினசரி உடலுறவு கொள்ளும் போது சில பிரச்சினைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கு இது நிலைமையை மோசமாக்கும். சுத்தமாக இல்லாவிட்டால் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் உள்ளிட்ட பிற நோய்த்தொற்றுகளின் அபாயத்தை ஏற்படுத்தும்.
இது மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வாய்ப்புகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.