பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே வாரத்தில் ரூ.6000 வழங்கப்படும் - அமைச்சர் உதயநிதி தகவல்..!!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வாரத்தில் ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி தகவல்.
ஒரு வாரத்தில் நிவாரணம்
சென்னை மவுலிவாக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளரிடம் பேசிய அவர், இன்னும் ஒரு வாரத்தில் டோக்கன் வழங்கப்பட்டு அதன் பிறகு நிவாரண நிதி அளிக்கப்படும். ரேஷன் கடைகளிலும் தண்ணீர் இருக்கும் காரணத்தால் அவர் அகற்றப்பட்டு, பின்னர் நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கப்படும் என்றும் அதன் பின்னர், நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பெருமளவு தண்ணீர் தேங்கவில்லை
தொடர்ந்து பேசிய அவர், மேலும், சென்னையில் பெருமளவு தண்ணீர் தேங்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகளின் விமர்சினத்திற்கு, அவர்கள் குறை மட்டும் தான் கூறுவார்கள் நாம் நமது பணியில் ஈடுபடுவோம் என்று பதிலளித்தார்.
மேலும், திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் வடிநீர் வாய்க்கால் அமைத்ததால் தான், சென்னையில் தண்ணீர் பெருமளவு தேங்கவில்லை என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.