நிவாரண தொகை பெறாதவர்கள் இன்று பெற்றுக் கொள்ளலாம் - ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
நிவாரண தொகை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
நிவாரண தொகை
குமரிக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இடைவிடாத கனமழை பெய்தது.
இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கரையோரம் இருக்கும் அனைத்து ஊர்களையும் வெள்ளம் சூழ்ந்தது. அப்பகுதி மக்கள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தனர்.
ஆட்சியர் அறிவிப்பு
உயிர்ச்சேதம், சொத்துக்கள் சேதம், பயிர்கள் சேதம் உள்ளிட்ட பல வகைகளில் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும் கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இன்னும் பலர் இந்த நிவாரணத்தொகையை வாங்கவில்லை என தெரியவந்தது.
இந்நிலையில், கன்னியாகுமரியில் இதுவரை வெள்ள நிவாரண நிதி ரூ.1000 வாங்காத அல்லது விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.