மின் இணைப்பு பெற விதிமுறை தளர்வு; முக்கிய மெசேஜ் - வாரியம் அறிவிப்பு!
மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மின்சார வாரியம்
தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில்,
தமிழ்நாட்டு மக்களுக்கு நற்செய்தி! தமிழக அரசின் புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு, மின் இணைப்பு பெற ‘கட்டிட நிறைவு சான்றிதழ்’ தேவை இல்லை.
விதிமுறை தளர்வு
14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள். 750 சதுர மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட வீடு. 14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டிடங்கள்.
அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை.
https://tangedco.org/en/tangedco/online-services/onlinesernew/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.