தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி - சினிமா காட்சிப்போல் பிரமிக்க வைத்த சீர்வரிசை!
தாய்மாமன்மார்கள் கொண்டு வந்த சீர்வரிசை ஊர்வலம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாய் மாமன்
திருமணம், பூப்புனித நீராட்டு விழா, வலைக்காப்பு என வாழ்வில் நடக்கும் அனைத்து முக்கியமான நிகழ்வுகளுக்கு பிரமாண்டமாக சீர்வரிசை வைப்பது வழக்கம். ஆனால் சமீப காலமாக இது போன்ற நிகழ்வுகளில் பிரமாண்டமாக சீர்வரிசை கொண்டு செல்லுதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் நீராட்டு விழாவிற்கு தனது மருமகளுக்கு தாய்மாமன்மார்கள் கொண்டு செல்லும் சீர்வரிசை பிரமாண்டமாக செய்யப்படும் நிகழ்வுகளாக மாறியுள்ளது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சோமசுந்தரவேல் மணிமாலா தம்பதியின் மகள் ஸ்ரீ சிவானி.
சீர்வரிசை
இவருக்கு பூ புனித நீராட்டு விழா ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு ஸ்ரீ சிவானியின் தாய்மாமன்மார்கள் லாரியில் 150 க்கு மேற்பட்ட சீர்வரிசை தட்டுகள், நூறு ரூபாய் நோட்டுக்களால் கட்டப்பட்ட நோட் மாலை,
தங்க நகை ஆபரணங்கள் ஆகியவற்றை மேளதாளம் முழங்க வானவேடிக்கையுடன் ஊர்வலமாக கொண்டு வந்தனர். மேலும், ஸ்ரீ சிவானியை பல்லக்கில் தூக்கி அழைத்து வந்தனர். அடுக்கடுக்கான சீர்வரிசை ரூபாய் நோட்டுகளால்
அலங்கரிக்கப்பட்ட மாலை தங்க நகை ஆபரணங்கள் என மருமகளுக்கு தாய் மாமன்மார்கள் ஊர்வலமாக சீர்வரிசை கொண்டு சென்ற நிகழ்வு அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.