கல்யாண வாழ்க்கை சலிப்பா இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க உறவு சிறக்கும்!

Marriage Relationship
By Sumathi May 16, 2024 01:30 PM GMT
Report

பிஸியான வாழ்க்கை நடத்துவது குடும்ப உறவில் சிக்கலை உண்டாக்கும்.

குடும்ப உறவு

கணவன் - மனைவிக்குள் அவ்வப்போது ஊடல்களும், சிறு சிறு சண்டைகளும் வருவதும் வழக்கம் தான். ஆனால் அது எல்லை மீறினால் உறவு சலிப்படையும் வாய்ப்புள்ளது.

கல்யாண வாழ்க்கை சலிப்பா இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க உறவு சிறக்கும்! | Relationship Tips Of Boredom In Marriage Tamil

ஆனால் இந்த உணர்வை முன்கூட்டியே கண்டறிந்து, உறவை வலுப்படுத்த நீங்கள் திட்டமிடலாம். எனவே பிரச்சனையின் அறிகுறிகளை குறித்து தெரிந்துக் கொள்ளாலாம்.

கோடையில் இரவு சரியா தூக்கம் வரவில்லையா? உங்களுக்கான டிப்ஸ் இதோ..

கோடையில் இரவு சரியா தூக்கம் வரவில்லையா? உங்களுக்கான டிப்ஸ் இதோ..

சில டிப்ஸ் இதோ..

கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவராக இருந்தால் இருவருமே வேலை டென்ஷனையெல்லாம் அலுவலகத்தோடு விட்டு விட்டு வர வேண்டும். குழந்தைகள் என்று வரும்போது இருவரும் பொறுப்புகளை பகிர்ந்து கொள்வது நல்லது. அதுதான் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

கல்யாண வாழ்க்கை சலிப்பா இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க உறவு சிறக்கும்! | Relationship Tips Of Boredom In Marriage Tamil

வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பற்றி கவலை இல்லாமல் தனக்கு நேரம் கிடைத்தால் அதில் ஓய்வு மட்டுமே எடுக்கும் கட்டாயம் இருவருக்குள்ளும் விவாதங்களை ஏற்படுத்தும். எனவே, கிடைக்கும் நேரத்தை இருவருக்கென ஒதுக்க வேண்டும்.

வீட்டு வேலைகளை பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்துவிட்டு, நம் கும்பத்தின் வேலை. இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்று ஆண்கள் முன்வர வேண்டும். இதைத்தான் பெண்களும் விரும்புகிறார்கள்.

கல்யாண வாழ்க்கை சலிப்பா இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க உறவு சிறக்கும்! | Relationship Tips Of Boredom In Marriage Tamil

உடலுறவு விஷயத்தில் வெளிப்படையான உரையாடல் நடக்காத போதும், பெண்ணின் விருப்பம் கண்டுக் கொள்ளப்படாமல் போகும்போது அது நேரடியாகவோ அல்லது வேறு வேறு விதங்களிலோ கணவன் மனைவிக்குள் பிரச்சனையாக வெடிக்கிறது.

தன் விருப்பத்தை மனைவியிடம் வெளிப்படுத்தும் ஆண் மனைவியின் விருப்பத்தையோ கருத்தையோ கேட்க தயாரக இருக்க வேண்டும்.