அவர் சொன்னதுல என்ன தப்பு, ரேப் சீன் எப்படி பண்ணுவாங்கனு தெரியுமா? குரல் கொடுத்த ரேகா நாயர்!

Trisha Mansoor Ali Khan Rekha Nair
By Sumathi Nov 24, 2023 02:30 PM GMT
Report

மன்சூர் அலிகான் சொன்னதுல என்ன தப்பு என்று ரேகா நாயர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை ரேகா நாயர்

நடிகை த்ரிஷா குறித்த மன்சூர் அலிகான் பேச்சுக்கு பல கண்டனங்கள் எழுந்து வருகிறது. ரசிகர்களும், திரை பிரபலங்களும் த்ரிஷாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் மன்சூர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

actress rekha-nair

தற்போது அவர் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள நடிகை ரேகா நாயர், மன்சூர் அலிகான் மீது இத்தனை குற்றச்சாட்டுகளை சொல்லும் சமூகவலைத்தளங்கள் யாராவது மன்சூர் அலிகான் பேசிய முழு வீடியோவை பார்த்தாங்களா.

அவர் செத்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் - ஆத்திரத்தில் நடிகை ரேகா நாயர்

அவர் செத்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் - ஆத்திரத்தில் நடிகை ரேகா நாயர்

ஆவேசம்

நான் மன்சூர் அலிகானுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. ஆனால், இந்த பிரச்சனையை எளிதாக முடித்திருக்கலாம். மன்சூரிடம் லோகேஷ் நேரடியாக பேசி, த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வைத்து பிரச்சனையை முடித்திருக்கலாம். இந்த விவகாரத்தில் த்ரிஷாவுக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு.

mansoor-alikhan-trisha-issue

மன்சூர் அலிகான் சினிமாடிக் ஆகவே பேசினார். அவர் தவறாக எதுவும் பேசவில்லை. ஆனால் பொதுவெளியில் பேசியது தான் தவறு. சினிமாவில் கற்பழிப்பு காட்சிகள் எப்படி பண்ணுவாங்க என சினிமாவில் உள்ளவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களே இந்த விவகாரத்தில் முரண்பாடாக பேசுகிறார்கள்.

த்ரிஷாவும் மன்சூர் அலிகானும் பேசியிருந்தால் இந்தபிரச்சனை எளிதாக முடிந்திருக்கும். சமூக ஊடகங்கள் தான் இதுபோன்ற விவகாரங்களை, இப்போது தான் நடப்பது போல் பெரிதாக்குகின்றன எனத் தெரிவித்துள்ளார்.