அப்படி நடக்கலனா..தனுஷை தான் திருமணம் செய்திருப்பேன்...!!கொளுத்திப்போட்ட பிரபல நடிகை!!

Dhanush Rekha Nair
By Karthick Oct 23, 2023 04:28 PM GMT
Report

அவ்வாறு ஒன்று மட்டும் நடக்கவில்லை என்றால் தனுஷை திருமண செய்திருப்பேன் என கூறி நடிகை ஒருவர் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ரேகா நாயர்

பிரபல தொலைக்காட்சி தொடர் மூலம் அறியப்பட்டவர் நடிகை ரேகா நாயர். இவர் எதையும் துணிவோடு பேசக்கூடியவர். சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நடித்திருந்தார்.

rekha-nair-says-wanted-to-marry-dhanush

தொடர்ந்து, இவர் குறித்த சர்ச்சை பேச்சுக்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், "தமிழ் சினிமாவில் தனுஷைத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்றார்.

அந்த இடம் தெரிந்தது.. அதை வைத்து மோசமாக பரப்பினார்கள் - ஓப்பனாக பேசிய கேப்ரில்லா!

அந்த இடம் தெரிந்தது.. அதை வைத்து மோசமாக பரப்பினார்கள் - ஓப்பனாக பேசிய கேப்ரில்லா!

திருமணம்

சமீபத்தில் அவரை சந்தித்தபோது கூட அவரிடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றேன் என கூறிய ரேகா நாயர், நான் சொன்னதுபோல் அவரிடம் பலரும் சொல்லியிருக்கலாம். என்றார். எனவே நான் சொன்னதை அவர் சாதாரணமாக எடுத்திருக்கலாம் என கூறினார்.

rekha-nair-says-wanted-to-marry-dhanush

ஆனால் அப்படி சொன்னதற்கான மதிப்பு என்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது என குறிப்பிட்ட ரேகா நாயர், எனக்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் அவரைத்தான் திருமணம் செய்திருப்பேன்" என்றும் தெரிவித்துள்ளார். சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து அவ்வப்போது தலைப்பு செய்தியாக மாறிவரும் ரேகா நாயர், மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றார்.