53 வயதில் கர்ப்பிணியான நடிகை ரேகா - வைரலாகும் புகைப்படம்!
நடிகை ரேகா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.
நடிகை ரேகா
80 களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேகா. த்யராஜூடன் இணைந்து கடலோர கவிதைகள் படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து, புன்னகை மன்னன், எங்க ஊரு பாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, நினைவே ஒரு சங்கீதம், புரியாத புதிர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

அதன்பின், சினிமாவில் இடைவேளைக்குப் பிறகு சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில், மீண்டும் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
அந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இதில் நடிகை ரேகா, எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள்.

தாய்மை அனுபவத்தை ஏற்க தயாராகும் மூத்த பெண்மணி ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி படம் தயாராகி வருகிறது.
41 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்: ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கை..! நாடாளுமன்றில் அமைச்சரின் அறிவிப்பு IBC Tamil
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan