நடிகைகள் குடிச்சா...எல்லாத்துக்குமே சரி'ன்னு அர்த்தமா..? கடுப்பான ரெஜினா!!

Regina Cassandra Tamil Cinema Tamil Actress
By Karthick Oct 03, 2023 06:23 AM GMT
Report

நடிகைகள் குடிக்கிறார்கள் என்பதால் அவர்கள் படுக்கையை பகிர்ந்துகொள்வார்கள் என்று கூறிவிட முடியாது என நடிகை ரெஜினா கசான்ட்ரா.

ரெஜினா

2005ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் படம் மூலம் நடிகையானவர் தமிழ் பெண்ணான ரெஜினா கசான்ட்ரா. சினிமா மீதான காதலின் காரணமாக நடிகையான இவர், தமிழை தொடர்ந்து, தெலுங்கு, இந்தி படங்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார். ‘

regina-talks-about-actress-shares-bed-if-drunk

கேடி பில்லா கில்லாடி ரங்கா’,‘ராஜதந்திரம்’,‘மாநகரம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை' போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர், தற்போது தமிழில் கள்ளபார்ட், ஹிந்தியில் section 108 போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.

குடிச்சா எல்லாத்துக்குமே ஓகே'வா..?

இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கருத்துக்கள் பெரும் வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில், நடிகைகள் குடித்துவிட்டால் படுக்கையை பகிர்ந்துகொள்வார்களா? என்று வெளிப்படையாக ரெஜினா பதிலளித்திருந்தார். நடிகைகள் குடித்து விட்டு பார்ட்டியில் கூத்தடிக்கிறார்கள் என்பது உண்மைதான்.

regina-talks-about-actress-shares-bed-if-drunk

ஆனால், அப்படி இருப்பதால் எல்லாவற்றிக்கும் சம்மதம் தெரிவிப்பார்கள் என்று நினைப்பது ரொம்பவே தவறு என்றார். குடிப்பதை அடிப்படையாக வைத்து ஒருவரின் நடத்தையை எப்படி கேள்விக்குறி ஆக்கலாம் என்று வினவிய ரெஜினா, குடிக்கிறார் என்பதற்காக அவர் படுக்கையை பகிர்ந்துகொள்வார் என்று நினைப்பதெல்லாம் அபத்தத்தின் உச்சம் என கட்டமாக பதிலளித்தார். மேலும், நடிகை ஒருவரின் குணத்தை அடிப்படையாக வைத்து அத்துமீறலாம் என்று நினைப்பது தவறான விஷயம்தான் என தெரிவித்தார்.