சில இயக்குநர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் - நடிகை ரெஜினா வேதனை

Regina Cassandra Magizh Thirumeni Tamil Actress VidaaMuyarchi
By Karthikraja Feb 10, 2025 06:00 PM GMT
Report

சில இயக்குநர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை ரெஜினா கசாண்ட்ரா தெரிவித்துள்ளார்.

ரெஜினா கசாண்ட்ரா

கண்ட நாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. தொடர்ந்து கேடி பிள்ளை கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

Regina Cassandra

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில், நடிகை ரெஜினா நெகட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். 

முஸ்லிமாக பிறந்த நான் கிறிஸ்டியனாக மாற காரணம் இதுதான் - மனம் திறந்த நடிகை ரெஜினா

முஸ்லிமாக பிறந்த நான் கிறிஸ்டியனாக மாற காரணம் இதுதான் - மனம் திறந்த நடிகை ரெஜினா

இயக்குநர்கள் ஏமாற்றிவிட்டனர்

இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ள அவர், "பொதுவாக, பெரிய ஸ்டார் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் கொடுக்கப்படுவதில்லை. பல பெரிய படங்களில் பெண் கதாபாத்திரங்கள் மிக மோசமாக எழுதப்பட்ட விதத்தால் ஏமாற்றமடைந்தேன். 

ரெஜினா கசாண்ட்ரா

விடாமுயற்சி படத்தில் அஜித்துடனும் இயக்குநர் மகிழ் திருமேனியுடன் பணிபுரிந்ததில் எனக்கு உத்வேகம் கிடைத்திருக்கிறது. அந்தப் படத்தில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் என்னைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என இயக்குநர் நம்பிக்கை அளித்தார். ஒரு சிக்கலான கதாபாத்திரத்தை என்னால் நியாயப்படுத்த முடியும் என்று நம்பியதற்காக இயக்குநருக்கு நன்றி.

ஒரு படத்தின் பெண் கதாபாத்திரம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதை கவனித்தாலே, அந்த படத்தின் கதை எப்படி என அறியலாம். அதனால்தான் இயக்குநர்களை நம்புகிறேன். ஆனால் சில இயக்குநர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். அதனால்தான் என்னிடம் சொல்லப்படும் ஒவ்வொரு கதையிலும், தனித்துவத்தை உணர்ந்தால்தான் அதில் நடிக்கவே ஒப்புக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.