முஸ்லிமாக பிறந்த நான் கிறிஸ்டியனாக மாற காரணம் இதுதான் - மனம் திறந்த நடிகை ரெஜினா
கிருஸ்துவ மதத்திற்கு மாறியது குறித்து நடிகை ரெஜினா கசாண்ட்ரா பேசியுள்ளார்.
ரெஜினா கசாண்ட்ரா
கண்ட நாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. தொடர்ந்து கேடி பிள்ளை கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அஜித் நடிப்பில் வெளியாக உள்ள விடாமுயற்சி படத்திலும், ஜாட், செக்சன்108 என்ற இரு ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
மத மாற்றம்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் கிறிஸ்டியனாக மாறியது குறித்து பேசியுள்ளார். இதில் பேசிய அவர், கிருஸ்துவரான என் அம்மாவும், இஸ்லாமியரான என் அப்பாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். எனவே நான் முஸ்லிமாகதான் பிறந்தேன்.
நான் பிறந்த முதல் 6 வருடங்களில் என்னை வேறு பெயரில்தான் அழைத்தார்கள். அதன் பிறகு என் பெற்றோர்கள் விவாகரத்து பெற்றதால் என் தாயுடன் வளர்ந்து வந்தேன். ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றுவது தான் சரியாக இருக்கும் என எனது தாய் கருதினார்.
அவர்களுக்கு இஸ்லாமிய மதம் பற்றி தெரியாது. எனவே கிருஸ்துவ மதத்தை பின்பற்ற சொன்னார்கள். அதன் பிறகே ஞானஸ்தானம் பெற்று என் பெயர் ரெஜினா கசாண்ட்ரா என்று மாற்றம் செய்யப்பட்டது" என கூறினார்