அட்ஜஸ்ட்மென்ட் பண்றியா'னு - 20 வயசுல தான் அப்போ எனக்கு.. ரெஜினா வேதனை
சினிமாவின் தான் எதிர்கொண்ட அட்ஜஸ்ட்மென்ட் சம்பவம் குறித்து நடிகை ரெஜினா மனம் திறந்துள்ளார்.
ரெஜினா
2005ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் படம் மூலம் நடிகையானவர் தமிழ் பெண்ணான ரெஜினா கசான்ட்ரா. சினிமா மீதான காதலின் காரணமாக நடிகையான இவர், தமிழை தொடர்ந்து, தெலுங்கு, இந்தி படங்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’,‘ராஜதந்திரம்’,‘மாநகரம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை' போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர்,தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் "விடாமுயற்சி" படத்திலும் நடித்து வருகின்றார்.

விரைவில் நடிகை ரெஜினாவிற்கும் தெலுங்கு நடிகர் ஒருவருக்கும் திருமணம் என்றெல்லாம் அண்மையில் செய்திகள் வெளியான நிலையில், அதனை ரெஜினாவின் தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது.
இவரது பழைய பேட்டி ஒன்று மீண்டும் வைரலாகி வருகின்றது. அதில், அவர் சினிமா துறையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
20 வயதுதான்
அவர் இது குறித்து பேசும் போது தான், பட வாய்ப்பில்லாமல் இருந்தபோது சிலரிடம் வாய்ப்புகள் கேட்டதாக குறிப்பிட்டு, அப்போது ஒருவர் ‘அட்ஜெஸ்ட்மென்ட்’டுக்கு தயாராக இருந்தால் உடனடியாக வாய்ப்புக் கிடைக்கும் என கூறியதாக தெரிவித்தார்.

அப்போது அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை என்றும் என் சம்பள விஷயம் பற்றி பேசுகிறாரோ என தான் நினைத்தாக கூறிய ரெஜினா, பிறகுதான் தன் மேனேஜரிடம் அது குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டதாக கூறி அப்போது தனக்கு வெறும் 20 வயதுதான் என தெரிவித்தார்.

மேலும், அதன்பிறகு இதுபோன்ற சம்பவங்களை தான் எதிர்கொள்ளவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil