ஆண் நண்பருடன் சேர்ந்து சித்ரவதை - சபரிமலை புகழ் ரெகானா பாத்திமா மீது தாய் புகார்!
ரெகானா பாத்திமா மீது சித்ரவதை செய்வதாக அவரது தாய் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
ரெகானா பாத்திமா
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பத்து வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்கள் தரிசனத்திற்கு செல்ல தடை உள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இடையில் சிலகாலம் மட்டும் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அப்போது ரெகானா பாத்திமா சபரிமலைக்கு வந்தார். இதனால் அவரும் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்டார். அதன்பின், குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தன் மகனையே தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்து இணையத்தில் வெளியிட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
தாய் புகார்
தொடர்ந்து, மாட்டு இறைச்சி குறித்து வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இந்நிலையில், ரெகானா மீது இப்போது அவரது தாயார் பியாரி புகார் கொடுத்துள்ளார். அதில், “என் மகள் மற்றும் அவரது முன்னாள் ஆண் நண்பர் மனோஜ் கே ஸ்ரீதர் என்னை கொடுமையான இன்னல் செய்கிறார்கள்.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தாக்குகிறார். அவருக்குப் பயந்து நான் இப்போது உறவினர் ஒருவர் வீட்டில் வசிக்கிறேன். ஆனால் என் உறவினர்களின் இல்லத்திற்கும் வந்து என்னை ரெகானா மிரட்டுகிறார்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து ரெகானாவை நேரில் அழைத்து ஆழப்புழா வடக்குக் காவல் நிலைய போலீஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.