கேரளாவை அலறவிடும் நரபலி: மருமகளை சித்ரவதை செய்த மாமியார் - பகீர் சம்பவம்
நிர்வாண பூஜையில் பங்கேற்க மாமியார், மருமகளை வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப தகராறு
கேரளா, கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாலு சத்திய பாபு(36). இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதன்பின் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவுக்கு சுற்றுலா செல்வதாக கூறி, அந்த பெண்ணை, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். ஆனால், நாகூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது தன்னை மட்டும் கணவர் மற்றும் மாமியார் ஒரு அறைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
நிர்வாண பூஜை
அந்த அறையில் மந்திரவாதி ஒருவர் தலைமையில் பூஜை ஒன்று நடந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு பெண்ணும் நிர்வாணமாக அமர்ந்திருந்தாக கூறப்படுகிறது. அதைபோன்று தன்னையும் அமர சொல்லி தனது கணவர் மற்றும் மாமியார் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்தார்.
அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் அந்த இடத்தை விட்டு சென்றதாக அந்த பெண் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண் நிர்வாண பூஜைக்கு பங்கேற்க மறுத்ததால் கார் ஏற்றிக் கொலை செய்ய முயற்சித்தாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த பெண் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
மாமியார் சித்ரவதை
அதனால் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு விவகாரத்து கோரி வழக்கு தொடர்ந்தார் என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் கணவர் மற்றும் உறவினர்கள் தமிழகத்தில் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.