ரொம்ப வில்லங்கமான திட்டமா இருக்கே : ஏலியன்களை ஈர்க்க மனிதர்களின் நிர்வாணப் படங்கள் , நாசாவின் புதிய திட்டம்

By Irumporai May 05, 2022 08:21 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஹாலிவுட் படங்களில் வருவது போன்று உண்மையில் ஏலியன்கள் உள்ளனவா? என்ற எண்ணம் அனைவரது மனதிலும் தோன்றிய வண்ணம் உள்ளது.மறுபுறம் இது தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில்,வேற்றுகிரகவாசிகளை(ஏலியன்களை) ஈர்க்கும் நோக்கில் நாசா விஞ்ஞானிகள் குழு,மனிதனின் நிர்வாண புகைப்படத்தை விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகளாக வேற்றுகிரகவாசிகள் அதாவது  ஏலியன்கள் இருக்கின்றனவா? என்று தொடர் ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,வேற்றுகிரக வாசிகளின் வடிவங்களை கவர மனிதர்களின் நிர்வாண படத்தைப் பயன்படுத்த நாசாவின் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

அந்த வகையில்,இரண்டு மனிதர்களின் நிர்வாண புகைப்படத்தை விண்வெளியில் சித்தரிக்கும் வகையில் வெளியிட விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். முழு நிர்வாணமான புகைப்படும்: இது ‘பீக்கன் இன் தி கேலக்ஸி’ (பிஐடிஜி) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.விஞ்ஞானிகள் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

இந்த விளக்கப்படத்தில்,முழு நிர்வாணமாக,கைகளை உயர்த்தி,வணக்கம் தெரிவிக்கும் ஆண் மற்றும் பெண்ணின் உருவங்கள் அடங்கும்.BITG திட்டம் மற்ற விண்வெளி நாகரிகங்களுக்கு மனிதர்களைத் தொடர்பு கொள்ள அழைப்பு விடுக்கும் செய்தியை அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆண் மற்றும் பெண் ஜோடி வணக்கம் மட்டுமே சொல்லும் பிக்சலேட்டட் விளக்கப்படங்களுடன் விஞ்ஞானிகள் புவியீர்ப்பு மற்றும் டிஎன்ஏவின் சித்தரிப்புகளையும் சேர்த்துள்ளனர்.

பைனரி டிரான்ஸ்மிஷன்: இதனிடையே,ஒரு ஆய்வில்,BITG திட்டத்தின் பின்னணியில் உள்ள விஞ்ஞானிகள் பால்வீதி விண்மீன் மண்டலத்தில் உள்ள பூமிக்கு அப்பாற்பட்ட உயிரினங்களுக்கு அனுப்புவதற்காக,புதுப்பிக்கப்பட்ட பைனரி-குறியீடு செய்யப்பட்ட செய்தி உருவாக்கப்பட்டது என்று கூறுகின்றனர்.