இன்ஸ்டாகிராம் காதல் விவகாரம்.. ட்ரோல் செய்த ஃபாலோவர்ஸ் - பள்ளி மாணவி விபரீத முடிவு!
தனது காதல் தொடர்பாக நெட்டிசன்கள் கிண்டல் செய்ததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் இன்ஸ்டாகிராம் இன்புலுயென்சரான ஆதித்யா நாயர். இவர் கடந்த வாரம் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆதித்யாவை காதலித்து ஏமாற்றியதாக மற்றொரு இன்ஸ்டாகிராம் கன்டென்ட் கிரியேட்டரான பினாய் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் இனைந்து ரீல்ஸ் செய்தபோது காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
நபர் கைது
இதனிடையே இவர்களின் காதல் பிரேக் அப்பில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனால் பினாயின் ஃபாலோவர்ஸ்கள் ஆதித்யாவை இணையத்தில் டிரோல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக தெரிகிறது.
இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவியான தனது மகளை பினாய் பேசி மயக்கி ஏமாற்றியதாக உயிரிழந்த பெண்ணின் தாய் தெரிவித்துள்ளார். மேலும், இவர்கள் இருவரது செல்போன்களை சோதனை செய்ததில், பினாய்க்கு எதிரான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.