ஆபாச கேள்விகள் - தற்கொலைக்கு முயன்ற சென்னை பெண் - பிரபல யூடியூப் தொகுப்பாளினி கைது !!
இன்றைய காலகட்டத்தில் நிறைய யூடியூப் பக்கங்கள் வந்துவிட்டன. என்ன கேள்வி கேட்கிறோம் என்ற ஒரு வரம்பு இல்லாமல் சில யூடியூப் பக்கங்கள் அருவெறுக்க தக்க வகையில் கேள்விகளை கேட்கிறார்கள்.
சிலர் அதற்கு கூச்சமின்றி பதிலும் அளித்து வருகிறார்கள். அது யூடுயூப்பில் பதிவேற்றம் செய்யப்பட பலரும் பல விதமான கமெண்ட்டுக்களை பதிவிடுகிறார்கள். சமூகவலைத்தளங்களில் சென்சார் என்ற ஒரு வரையறை இல்லாததால், இந்த கேள்விகள் எல்லை மீறி போகின்றன.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கண்டங்களை தெரிவித்து வரும் நிலையில், அதிர்ச்சிகர செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள தனியார் மால் ஒன்றிற்கு சில மாதங்களுக்கு முன் 23 வயதான பெண் ஒருவர் வந்துள்ளார்.
தற்கொலை
அப்போது அங்கு வந்த யூடியூப் சேனல் "veera talks டபுள் எக்ஸ்" பக்கத்தின் தொகுப்பாளர் இரட்டை அர்த்த வசனங்களுடன் ஜாலியாக பேட்டி அளித்துள்ளார். ஆனால், அது சமூகவலைத்தளங்களில் வெளியாகி நிலையில், பேட்டியளித்த பெண்ணிற்கு மெல்ல பயம் எழ துவங்கியுள்ளது. பெற்றோர்கள் இல்லாத நிலையில், சகோதரர்களின் பராமரிப்பில் இருக்கும் அப்பெண், மனஅழுத்தத்தின் காரணமாக, சட்டென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக, போலீசாரின் விசாரணையில், நான் அந்த 'யூடியூப்' சேனலுக்கு பேட்டி தர முதலில் மறுத்ததாக குறிப்பிட்டு, எனது அனுமதி இல்லாமல் பேட்டியை வெளியிட மாட்டோம் என அவர்கள் தரப்பில் இருந்து உறுதியளிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.
ஆனால், தனது அனுமதி இல்லாமல் பேட்டியை வெளியிட்டு அவர்கள் அவமானப்படுத்திவிட்டததாக கூறி, எனவே சம்பந்தப்பட்ட 'யூடியூப்' சேனல் மற்றும் பேட்டி எடுத்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவர் அளித்த புகாரின் பேரில், சம்மந்தப்பட்ட சேனலின் ராம் (வயது 21), உதவியாளர் யோகராஜ் (21), பேட்டி எடுத்த ஸ்வேதா (31) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.