என் முன்னாடியே அந்த பெண் இயக்குனரை கொஞ்சுறாரு - எந்த பொண்டாட்டி தான் ஒத்துப்பா !! சங்கீதா வெளிப்படை
2018 -ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அவரின் வசன உச்சரிப்பிற்கே பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
ரெடின் கிங்ஸ்லி அதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் மீண்டும் டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ரஜினியுடன் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்திலும் ரெடின் நடித்திருந்தார்.
ரெடின் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். திருமணமான முதலே இவர்கள் இருவரை குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன.
பணத்துக்காக திருமணம் செய்து கொண்டார்கள், இந்த படத்தில் இருப்பது சங்கீதாவின் முதல் திருமணத்தில் பிறந்த குழந்தை என பல விதமான செய்திகள் நாள் ஒன்றுக்கு வெளிவந்தன. ஆனால், இவர்களது திருமணம் உறவில் எந்த பிரச்னையும் இல்லை.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சங்கீதா, சமீபத்தில் அளித்த பேட்டியில், கவின் நடிக்கும் Bloody Begger படத்தின் பர்ஸ்ட் லுக் அறிவிக்கும் வீடியோவில் அப்படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் திலீக்குமார் பிரமோ வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ரெடின் கிங்ஸ்லி கல்யாணமாகிவிட்டது, உங்களோடு சேர கூடாதுன்னு மனைவி சொல்லிட்டா என்று கூறியிருப்பார்.
அதுபற்றி சஞ்கிதாவிடம் கேட்ட போது, ஆமாம், அதெல்லாம் நிஜம் தான் சேரக்கூடாதுன்னு சொல்லிட்டு சேர்ந்து சுத்திகிட்டு இருப்பார். பகலில் தூங்கிட்டு நைட்டு நெல்சனுடன் இருப்பார். அதன்பின் அதிகாலை 4, 5 மணிக்கு தான் வருவார். இப்படி இருந்தால் எந்த பொண்டாட்டிக்கு ஒத்துப்பாங்க, நெல்சன் வீடு தான் மாமியார் வீடு என்று புலம்பியிருக்கிறார்.மேலும், அவர் தீராத விளையாட்டு பிள்ளை தான்.
4 பசங்க 1 பொண்ணு இருந்தா, பர்ஸ்ட் அந்த பொண்னு கிட்டதான் போய் பேசுவாரு, அந்த மாதிரி ஆள் தான். மலையாள படத்தின் ஷூட்டிங்கில் பெண் உதவி இயக்குனர் என் கண் முன்னே கிள்ளி கொஞ்சி இருந்தார்.