அது என் குழந்தை இல்லை...காசுக்காக தான் ரெடின் கூட திருமணமா? சீக்ரெட் உடைத்த சங்கீதா
ரெடின் கிங்ஸ்லி
2018 -ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அவரின் வசன உச்சரிப்பிற்கே பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
ரெடின் கிங்ஸ்லி அதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் மீண்டும் டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் சமீபத்தில் வந்த ஜெயிலர் படத்திலும் அவர் நடித்து இருந்தார்.
திருமணம்
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை சில மாதங்கள் முன்பு ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்து கொண்டார். திருமணமான முதலே இவர்கள் இருவரை குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன.
இது சங்கீதாவிற்கு இரண்டாவது திருமணம் என்றும் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததாகவும் சங்கீதாவிற்கு ஒரு மகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது. பெண் குழந்தை ஒருவருடன் ரெடின் மற்றும் சங்கீதா இருக்கும் புகைப்படமும் சில காலம் முன்பு வெளியாகி வைரலானது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சங்கீதா இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
பணத்துக்காக
அவர் பேசும் போது, ஏற்கனவே தனக்கு குழந்தை இருப்பதாக செய்திகள் வெளியிட்டார்கள் என கூறி, அக்குழந்தை தன் சகோதரரின் மகள் தான் என விளக்கமளித்து அதனை அப்படியே நினைத்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய சங்கீதா, சினிமாத்துறையில் இருப்பவர்களுக்கு ஒரு வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ள, கொஞ்சம் கஷ்டம் தான் என்றும் இந்த வயசுல கல்யாணம் தேவையா என்று பல கமெண்ட்ஸ்கள் வரும் என்றும் அப்பேட்டியில் சங்கீதா கூறினார்.
மேலும், பணத்துக்காக ரெடின் கல்யாணம் செய்தேன் என சொல்லும் போது, தானும் ஒன்னும் இல்லாமல் வந்தவள் இல்லை என தனக்கு தோன்றுவதாக கூறிய சங்கீதா, இதற்கு எல்லாம் விளக்கம் கொடுத்துட்டு இருக்க முடியாது என கூறி, அவரின் அரவணைப்பு குணம் தான் என்னை கவர்ந்ததே தவிர பணம் எல்லாம் இல்லை என்று சங்கீதா தெரிவித்திருக்கிறார்.