10 நிமிஷம் தான் எடுப்பாரு; அதட்டி சவுண்டா எதுமே பண்ணமாட்டாரு.. - ரெடின் மனைவி சங்கீதா ஓபன் டாக்!
நடிகை சங்கீதா மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.
ரெடின்-சங்கீதா
காமெடி நடிகராக அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி கோலமாவு கோகிலா,டாக்டர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து, அண்ணாத்த, ஜெய்லர், விஜய்யின் பீஸ்ட், சிம்புவின் பத்து தல, விஷாலின் மார்க் ஆண்டனி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் சீரியல் நடிகை சங்கீதாவை ரெடின் திருமணம் செய்து கொண்டார். சங்கீதா இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்திருந்தார்.
பேட்டி
அதில் சங்கீதா பேசியதாவது "மாஸ்டர் படத்தில் என்னுடைய சீன்ஸ் 3,4 நிமிஷம் தான் வரும்னு எனக்கே தெரியும். ஆனால் மதி என்ற அந்த கேரக்டர் இந்த அளவுக்கு ரீச் ஆகும்னு எதிர்பார்க்கல.
மாஸ்டர் பட ஷூட்டிங்கில் லோகேஷ் வரும்போது அசிஸ்டென்ட் டேரக்டர்ஸ் எல்லாம் அனல் மாதிரி பறந்து வேலை செய்வாங்க. அப்போ சார் வருவாரு, பாப்பாரு டக்குனு ஒரு 10 நிமிஷம் எடுப்பாரு போயிட்டே இருப்பாரு, அவ்வளவுதான். கொஞ்சம் கூட அந்த அதட்டி சவுண்டா பேசுறது, பண்றது எதுமே லோகேஷ் பண்ணமாட்டாரு " என்று சங்கீதா பேசியுள்ளார்.