எல்லாம் வீணா போச்சே.. சாலையில் வெள்ளம் போல் ஓடிய 22 லட்சம் லிட்டர் ரெட் ஒயின் - என்ன காரணம்?

Viral Video Accident Portugal
By Vinothini Sep 12, 2023 05:53 AM GMT
Report

சாலைகளில் 22 லட்சம் லிட்டர் ரெட் ஒயின் ஆறு போல் ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒயின் வெள்ளம்

போர்ச்சுகலில் உள்ள சாவோ லூரென்சோ டோ பைரோ என்ற சிறிய நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நகரத்தில் உள்ள மலையிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் ஒயின் கீழே பாய்ந்து தெருக்களில் வெள்ளம் போல் ஓடியது.

red-wine-flood-in-portuguese

இதனை கண்ட மக்கள் அதிர்ச்சியில் திகைத்தனர். இந்த சாலைகளில் ஆறாக ஓடும் ஒயினை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அதில் பல லட்சக்கணக்கான லிட்டர் ஒயின் ஆறுபோல் ஓடிகொண்டிருக்கிறது, இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விபத்து

இந்நிலையில், அந்த நகரில் உள்ள ஒயின் தயாரிப்பு ஆலையில் 20 லட்சம் லிட்டருக்கும் அதிகமான சிவப்பு ஒயின் கொண்ட பீப்பாய்கள் ஏற்றிச் சென்ற வாகனம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதால், இவ்வாறு வெள்ளம்போல் ஓடியதாக கூறப்படுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால் சில வீடுகள் சேதமடைந்துள்ளது, செர்டிமா நதி ஓயின் நதியாக மாறுவதற்கு முன், ஒயின் வெள்ளத்தைத் தடுக்க தீயணைப்புத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

பெருக்கெடுத்து ஓடிய ரெட் ஒயின் வெள்ளம் வேறு திசையில் திருப்பிவிடப்பட்டு, அருகிலுள்ள வயல்வெளியில் பாயச் செய்தது என்று கூறப்படுகிறது. மேலும், அந்த மதுபான நிறுவனம் மன்னிப்புக் கேட்டு, "சுத்தம் செய்தல் மற்றும் சேதங்களை சரிசெய்வது தொடர்பான செலவுகளுக்கு நாங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம். உடனடியாகச் நடவடிக்கை எடுக்கிறோம்" என்று கூறியுள்ளது.